fbpx

ரேஷன் மூலம் 65 வயது மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மானிய விலையில் உணவு பொருள்…!

65 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ல் இடம் பெற்றுள்ள பிரிவுகளின்படி, கிராமப்புறங்களில் 75 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 50 சதவீதம் பேரும் மானிய விலையில், உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு அந்த்யோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை குடும்பங்கள் என்ற பிரிவுகளின் கீழ், உணவு தானியங்களை வழங்குவதற்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை ஒதுக்கீடு செய்கிறது. நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை வழங்கப்படும்.

இந்த உணவு தானியங்களை வயது முதிர்வு (65 வயதுக்கு மேல்), உடல் ரீதியான குறைபாடுகள் உள்ளவர்கள் உணவு தானியங்களைப் பெறுவதற்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளதாக கூறப்படுவதைக் கருத்தில் கொண்டு, இத்தகையவர்களுக்கு உணவு தானியங்களை சிறப்பு வழிமுறைகளைக் கையாண்டு வழங்குமாறு 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்தத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஒதுக்கீட்டு உணவு தானியங்களை வீடுகளுக்கு நேரடி விநியோகம் செய்வது, பயனாளிகளின் அங்கீகாரம் பெற்றவர்கள் மூலம் உணவுப் பொருட்களை விநியோகிப்பது ஆகிய வழிமுறைகளைக் கையாளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கோடைக்காலம்!... வயிறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்!... நுங்கு சர்பத் ரெசிபி!...

Fri Apr 7 , 2023
கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நுங்கு சர்பத் ரெசிபி குறித்து இதில் பார்க்கலாம். கோடைக்காலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கடும் வெயிலில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைக்க நீரேற்றம் அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுவகைகளை எடுத்துக்கொள்வது அவசியமாக உள்ளது. மேலும், உடல் சூடு காரணமாக வயிற்றுப்போக்கு, வயிறு கடுப்பு, நீர் கடுப்பு போன்ற பிரச்சனைகள் அதிகளவில் சிலர் […]

You May Like