fbpx

அதிரடியாக விளையாடி உலக கோப்பையை வென்று கொடுத்த கால்பந்து வீராங்கனைக்கு….! இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி….!

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தந்தையின் இறப்புச் செய்தி கூட தெரியாமல், விளையாடிக் கொண்டிருந்த ஸ்பெயின் அணியின் கேப்டன் ஓல்கா கார்மோனா, உலக கோப்பையை வென்று கொடுத்து சாதனை படைத்திருக்கிறார்.

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணிக்கு ஒரு கோலை அடித்து, கோப்பையை வென்று கொடுத்த அந்த அணியின் கேப்டன் ஓல்கா கார்மோனாவுக்கு, அவருடைய தந்தையின் இறப்பு பற்றிய செய்தி வெற்றிக்கு பிறகு தான் தெரிவிக்கப்பட்டது.

அவரது தந்தை உயிரிழந்த செய்தியை பற்றி தெரிவித்தால், அவருடைய ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்று நினைத்த குடும்பத்தாரும், கால்பந்து நிர்வாகிகளும் இந்த விஷயத்தை பற்றி அவருக்கு தெரிவிக்கவில்லை.

இறுதிப் போட்டி நடைபெற்ற அன்றைய தினம் கார்மோனாவின் தாயாரும், சகோதரர்களும் ஆஸ்திரேலிய நாட்டிற்கு வருகை தந்தனர். ஸ்பெயின் கோப்பையை வெற்றி பெற்ற பிறகுதான் கார்மோனாவுக்கு அவருடைய தந்தை மறைவு தொடர்பான செய்தி கூறப்பட்டது.

இந்த நிலையில் தான், ரியல் மாட்ரிட் கிளப் மற்றும் தேசிய கால்பந்து சங்கங்களின் நிர்வாகிகள் கார்மோனாவின் தந்தையின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு, கார்மோனாவை ஸ்பெயின் கால்பந்தின் வரலாறு என்று அவர்கள் புகழ்ந்துள்ளனர்.

Next Post

மேகதாது அணை தான் நிரந்தர தீர்வு..! கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு..!

Mon Aug 21 , 2023
காவேரி நீர்திறப்பு குறித்து தமிழ்நாடு சார்பாக தொடர்ந்த இடையீட்டு மனுவை, விசாரிக்க ஒட்டுமொத்த காவேரி விவகாரத்தையே விசாரிப்பதாற்காக புதிய அமர்வு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்த நிலையில், கர்நாடகா அரசு புதிய இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதாவது தமிழகம் சார்பில் கேட்டிருப்பது இந்த ஆண்டு கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய நிலுவைத் தண்ணீரை திறந்து விட உத்தரவிடுங்கள் என்று கூறியுள்ளது. ஆனால் கர்நாடக […]

You May Like