fbpx

இன்று இந்த மாவட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை…! தமிழக அரசு அறிவிப்பு…!

மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு – தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து 4.12.23 திங்கட்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பொழிவும், பலத்த காற்றும் வீசப்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று ஒருநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மாதவிடாய் காலத்தில் அன்னாசி பழ ஜூஸ் குடிக்கலாமா.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Mon Dec 4 , 2023
பருவமடைந்த பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. இந்த சுழற்சியின் போது இரத்தப்போக்கு ஏற்படுவதோடு தசை பிடிப்பு மற்றும் வயிற்று வலி போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. இவை பெண்களின் ஹார்மோன் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு அன்னாசி பழச்சாறு ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது. அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, மாங்கனிஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இந்த பழச்சாரினை மாதவிடாய் […]

You May Like