ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி அன்றே விநாயகர் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.. எனவே அந்த சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.. ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி வந்தாலும், ஆவணி மாதத்தில் வரும் ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் வழிபட்டால், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது.. விநாயகர் சதுர்த்தி வழிபடும் முறை, சிலை வாங்கும் நேரம் & பூஜை நேரம் குறித்து தற்போது பார்க்கலாம்..
விநாயகர் சதுர்த்தி கொண்டாட பூஜை நேரம் :
- 31.08.2022 காலை ப்ரம்ம முகூர்த்தத்தில் வழிபடுவதாக இருந்தால்,காலை 4:00 மணி முதல் 6 மணி வரை வழிபாடு செய்யலாம்..
- 6 மணி முதல் 7:15 மணி வரை வழிபாடு செய்யலாம்
- 9 மணி முதல் 12 மணி வரை வழிபாடு செய்யலாம்
- மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு செய்யலாம்
31ம் தேதி மதியம் இரண்டே முக்கால் மணி வரைக்கும் தான் சதுர்த்தி திதி உள்ளது. ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி தானே முக்கியமானது. அதனால் இந்த சதுர்த்தி திதி மாலையில் வர வில்லையே. ஆனாலும் நாங்கள் விநாயக பெருமானை மாலையில் வழிபடலாமா என்றால் காலையில் நமக்கு துவங்கும் போது சதுர்தியிலேயே துவங்குகின்ற காரணத்தால் அன்று மாலை நாம் விநாயகரின் வழிபாடு செய்து கொள்ளலாம். அதனால் 31ம் தேதி மாலை நாம் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்து வழக்கம் உள்ளவர்கள் மாலையிலும் செய்து கொள்ளலாம். மாலையில் செய்ய நேரம் இல்லாதவர்கள் காலை வழிபாடு செய்யலாம். காலை விநாயகர் வாங்கி வந்து பூஜை செய்ய வேண்டும் என்பவர்கள் 9 மணி முதல் 12 மணி வரை வழிபாடு செய்யலாம். வீட்டிலேயே விநாயகர் வைத்திருப்பவர்கள் ப்ரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்யலாம்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை எப்படி கொண்டாடுவது? வீட்டில் பாரம்பரியமாக சிறிய விநாயகர் விக்கிரகம் இருந்தால் அதனை வைத்து வழிபாடு செய்யலாமா என்றால் ரொம்ப நல்லது அதனை வைத்து வழிபாடு மகிழ்வாக செய்யலாம். வருடவருடம் புதிதாக விநாயகர் வாங்கித் தான் வழிபாடு செய்வோம் என்றால் அப்படி வழக்கம் வைத்திருந்தால் அவ்விதம் வாங்கி வழிபாடு செய்யலாம்.
வாங்கிய சிலையை கட்டாயம் கரைக்க வேண்டும் : வாங்கும் விநாயகரை வணங்கி விட்டு எங்கோ கொண்டு வைப்பது கூடாது. யாராவது எடுத்துச் செல்வார்கள் கரைத்து விடுவார்கள் எனும் அலட்சியத்துடன் விநாயகரை வைப்பதாக இருந்தால் அதனை வாங்காமல் வீட்டில் இருக்கும் விநாயகரை வைத்து நாம் வழிபாடு செய்து கொள்ளலாம். கரைக்கிறதுக்கு நமக்கு வசதி உள்ளது. நாங்கள் முறையாக கரைத்து விடுவோம் என்றால் கட்டாயம் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை முறையாக வாங்குங்கள்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் வீட்டில் வைத்து வணங்கும் விநாயகரை வைத்தே வழிபாடு செய்யலாம். புதிதாக விநாயகர் வாங்க வேண்டும் எனும் அவசியம் கிடையாது. வீட்டிலேயே கைகளால் செய்து மஞ்சளில் விநாயகர் வைத்து எளிமையாக செய்து வழிபடலாம்.
31ம் தேதி காலை பூஜை செய்கின்றோம் எனில் 30ம் தேதி மாலையிலேயே நாம் நமது வீட்டினை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். விநாயகருக்கு பிடித்த நெய் வேத்யங்கள் , பூஜை பொருட்கள் அனைத்தும் முதல் நாளே வாங்கி தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். காலையிலேயே எழுந்து விநாயக பெருமானை வாங்கும் போது நல்ல நேரத்தில் வாங்க வேண்டும். வாங்கி வந்தவுடன் வாசலில் விநாயகரை நிறுத்தி தீபம் காட்டி விநாயக பெருமானே எங்கள் வீட்டில் எழுந்தருளி சந்தோசமாக அனைவரையும் வாழ வைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து விட்டு பூஜை செய்யும் இடத்தில் விநாயகரை வைக்க வேண்டும்.
நெய்வேத்யங்கள் : பால் , பழங்கள் , கடலை , மோதகம் , கொழுக்கட்டை , தேங்காய் , வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு என வழக்கமாக நாம் என்ன செய்வோமோ அதனை வைத்து சர்க்கரை பொங்கல் , அவல் , பொறி என கிடைப்பதை வைக்கலாம். எளிமையாக 2 வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு , அவல் பொரிகடலை வைத்து கூட வழிபாடு செய்யலாம்.
வெள்ளை எருக்கு , கலர் எருக்கு எதனை பயன்படுத்துவது ? இரண்டுமே தாராளாமாக பயன்படுத்தலாம். எருக்கம் பூ நாம் மாலையாக போடலாம். அர்ச்சனைக்கு வைத்து கொள்ளலாம். மிக முக்கியமானது அருகம் புல். அது இருந்தால் மிக விஷேசம். இருந்தால் எளிமையாக வைத்து வழிபாடு நடத்தலாம். விநாயகர் அகவல் பாராயணம் செய்தல் மிக மிக விஷேசம்.