fbpx

இன்றே கடைசி நாள்!… மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்!… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TNPSC: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட ஒருமாத கால அவகாசம் இன்றுடன்(ஏப்ரல் 27) முடிவடைகிறது.

உதவி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு உயரிய பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு மார்ச் 28ம் தேதி முதல் இன்றுவரை (ஏப்ரல் 27) ஒரு மாதத்துக்கு விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று (ஏப். 27 இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்ட்டுள்ளது.

தேர்வர்கள் ஆன்லைன் மூலம் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். குரூப் 1 தேர்வுக்கு 90 காலி இடங்கள் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 34-க்குள் இருக்க வேண்டும். இதில் எம்பிசி, டிசி, பிசி முஸ்லிம்கள், எஸ்சி, எஸ்டி தேர்வாளர்களுக்கும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த கைம்பெண்களுக்கும் 39 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 வரை குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. எனினும் முதன்மைத் தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. முதல்நிலைத் தேர்வு – பொதுப் பாடத்திட்டம் (175 கேள்விகள்), ஆப்டிட்யூட் தேர்வு (200 கேள்விகள்) – மொத்தம் 300 மதிப்பெண்கள். 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

தேர்வு குறித்த முழுமையான அறிவிக்கையைக் காண https://www.tnpsc.gov.in/Document/english/04_2024_GRP1_ENG_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம். கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/-ல் தெரிந்துகொள்ளுங்கள்.

Readmore: புற்றுநோய் சிகிச்சையில் vitamin D-யின் நன்மைகள்.!! ஆச்சரியம் அளிக்கும் ஆராய்ச்சி முடிவுகள்.!!

Kokila

Next Post

பெண்களே!… இந்திய நாப்கினால் புற்றுநோய் ஆபத்து!… ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Sat Apr 27 , 2024
Napkin: இந்தியாவில் தயாரிக்கப்படும் நாப்கின்களில் அதிகபட்சமாக ரசாயனம் கலப்பதாகவும் இதனால் பெண்களுக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படும் என்றும் புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் இயற்கையான அதே சமயம் சவாலான பிரச்சனை மாதவிடாய். இந்த நாட்களில் பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளோடு அலுவலக வேலைகள் என எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த இக்கட்டான சூழலில் உடல் உபாதைகளை எதிர்கொள்வது ஒரு […]
’தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் நாப்கின் இயந்திரங்கள்’..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

You May Like