பி.இ, பி.டெக் படிப்பில் சேரவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவு, கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவுக்கான கடைசி நாளாக ஜூலை 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது. பின்னர் CBSE மாணவர்களுக்கான 12 -ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, அறிவிக்கப்பட்டு இருந்த கடைசி தேதியை மாற்றி, CBSE தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாள்கள் அவகாசத்தை நீட்டித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், CBSE 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 22 ஆம் தேதி வெளியானது. எனவே பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கு ஜூலை 27-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் அனைவரும் உடனே விண்ணப்பிக்க வேண்டும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் விண்ணப்ப கட்டணம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது வரை, பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 2,04,151 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனர். இவர்களில் 1,57,932 பேர் கட்டணங்களை செலுத்தியுள்ளனர்.அதில் 1,43,207 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் கடந்த ஆண்டை விட அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 4,01,494 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 3,30,132 பேர் விண்ணப்பங்களை முழுவதும் பதிவேற்றியுள்ளனர். அதில் 2,93,912 பேர் கட்டணங்களை செலுத்தியுள்ளனர்