fbpx

கவனம்…! நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்…!

2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 7 அன்று நிறைவடைந்தது.

இந்நிலையில், விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான அவகாசம் நேற்று தொடங்கியது. neet.nta.nic.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் இன்று மாலை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

English Summary

Today is the last day to make corrections in NEET exam application.

Vignesh

Next Post

காலையிலேயே வாழைப்பழம் சாப்பிடுபவரா நீங்கள்..? அப்படினா இது உங்களுக்குத்தான்..!! என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

Tue Mar 11 , 2025
Eating a banana in the morning increases carbohydrate intake, which can lead to overeating and weight gain.

You May Like