fbpx

மக்களே கடும் எச்சரிக்கை…! இன்று இந்த 6 மாவட்டத்தில் கனமழை….! எல்லாம் உஷாரா இருங்க…!

தமிழக இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 19-ம் தேதி அன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சுமார் 630 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு-தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

#Alert..!! மிக கனமழை எச்சரிக்கை..!! மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு பரபரப்பு உத்தரவு..!!

இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு – புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

நாளை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வரும் 23 மற்றும் 24-ம் தேதிகளில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சோகமான செய்தி..!மிகப்பெரிய பிரபலம் காலமானார்...! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...!

Mon Nov 21 , 2022
ஆரூர்தாஸ் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். சென்னை தி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆரூர்தாஸ் வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை அவரது இல்லத்தில் காலமானார். ஆரூர்தாஸ் உடல் இன்று மதியம் 12 மணி வரை அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் […]
தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..! ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவுபோட்ட முதல்வர்..! மக்களே உஷார்

You May Like