fbpx

இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் உயரும் சுங்க கட்டணம்…! எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் உள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவுகளாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில், கடந்த 2023ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வு 26 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு (செப்டம்பர் 1ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 26 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி மாவட்டம் சமயபுரம், மதுரை எலியார்பத்தி, சேலம் ஓமலூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. அதன்படி கார்களுக்கான கட்டணம் 45 ரூபாயிலிருந்து 5 ரூபாய் அதிகரித்து, 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய ரக சரக்கு வாகனங்களுக்கு 78 ரூபாயில் இருந்து 85 ரூபாயாகவும், பேருந்துகள் மற்றும் டிரக்குகளுக்கு 165 ரூபாயிலிருந்து 175 ஆக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிக சக்கரங்களை கொண்ட லாரிகளுக்கான கட்டணம், சக்கரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 270 ரூபாய் முதல் 495 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண நிர்ணயம் அனைத்தும் பாஸ் டேக் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். பாஸ் டேக் இல்லாத வாகனங்கள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Kathir

Next Post

இன்றே கடைசி.! 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், இதை செய்யவில்லை என்றால் ஊதியம் கிடையாது..!

Thu Aug 31 , 2023
கடந்த 2006ஆம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், தொடங்கப்பட்டதுதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். இது பெரும்பாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. குளங்களை தூர்வாருவது, கால்வாய்களை பராமரிப்பது உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலைபார்க்கும் பணியாளர்களுக்கு இரண்டு முறைகளில் […]

You May Like