fbpx

விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி..!! எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க..!!

விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி தனி விண்கலம் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு கொண்டு வரப்பட்டது.

மனிதனின் விண்வெளி மீதான மோகமும் தாகமும் எப்போது தீருமோ தெரியவில்லை. அப்படிப்பட்ட விண்வெளியை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அதிசயம் ஒன்றை நடத்திக் காட்டியிருக்கிறது நாசா. விண்வெளியில் மனிதன் நடமாடுவதற்கே கடும் முயற்சி எடுக்க வேண்டிய நிலையில், அங்கு தக்காளியை விளைவித்து காட்டியிருக்கின்றனர். விண்வெளியில் மனிதர்களுக்கான சில உணவுப்பொருட்களை நிலவில் இருந்து கொண்டு வரப்படும் மண்ணைக் கொண்டு விளைவிக்க முடியுமா? என்ற முயற்சியை கடந்தாண்டே நாசா தொடங்கி விட்டது. அந்த முயற்சியில் இப்போது முதல் வெற்றியாக தக்காளி விளைந்திருக்கிறது. வரும் காலத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கோ, நிலவிற்கோ அல்லது செவ்வாய் கிரகத்திற்கோ ஆய்விற்காக செல்லும் விண்வெளி வீரர்களுக்கு இயற்கையான பிரஷ்சான காய்கறிகள் கொண்ட உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நிலவில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு அந்த மண்ணில் தக்காளி விதை விதைக்கப்பட்டது. பூமியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தக்காளி விதையும் விண்வெளியின் சீதொஷ்ண நிலைக்கு ஏற்ப பதப்படுத்தப்பட்டிருந்தது. அந்த தக்காளி விதைக்கப்பட்டு முளைத்த செடியில் சரியாக 104 நாட்கள் கழித்து தக்காளி விளைந்திருக்கிறது. அந்த தக்காளி பறிக்கப்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விண்கலம் மூலம் பூமிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் நாசாவிற்கு சொந்தமான ஸ்பேஸ் சென்டரலில் அந்த தக்காளி வைக்கப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட இருக்கிறது.

இது, ஒரு முன்னோட்ட முயற்சி என்றும், இதில் வெற்றி பெற்றால் பெரிய அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை விண்வெளியில் விளைவிக்க முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. பொதுவாகவே தோட்ட வேலைகளில் ஈடுபடுவது மனதை இலகுவாக்கும் வேலை. விண்வெளி மையத்தில் வீரர்கள் இது போன்ற தோட்ட வேலைகளில் ஈடுபடும் போது, மனதிற்கு இதமாகவும், மன அழுத்தம் குறையும் என்றும் நாசா நம்புகிறது. அப்படி விண்வெளி தோட்டம் சாத்தியமானால் சாலட் தயாரிக்கப் பயன்படும் இலகு ரக காய்கறிகளை விளைவித்து வீரர்களே சாலட் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். அதற்காகத் தான் பாடுபடுகிறது நாசா. அதோடு, விண்வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள தக்காளியை பார்ப்பதற்கு பலரும் ஆவலோடு இருக்கிறார்களாம்.

Chella

Next Post

மக்களே கவனமா இருங்க..!! இன்னும் 10 நாட்களில் உச்சத்தை தொடும் கொரோனா..!! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!!

Mon Apr 17 , 2023
கொரோனா வைரஸின் வீரியமானது குறைந்து நம்மை விட்டு ஒழிந்து விட்டதாக நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கொரோனா வைரஸ் புது புது வடிவங்களில் நம்மை சுற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் புயலை கிளப்பிய இந்த கொரோனா வைரஸ், 2020 தொடக்கத்தில் உலகை ஒரு கலக்கு கலக்க பிறகு உருமாற தொடங்கியது. இதன் காரணமாக முதலில் ஒரு அலை உருவானது. அதன் பிறகு டெல்டா […]

You May Like