தமிழ்நாட்டில் கடந்த கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் சென்ற மே மாதம் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு ஜூன் மாதம் 12ஆம் தேதி அதாவது நாளை மாலை வரையில் அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது.
மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் செய்வது அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும், இதனைத் தொடர்ந்து, மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்ட பின்னர் சான்றிதழில் திருத்தம் செய்யப்படாது எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருக்கிறது.