fbpx

#Tngovt: நாளை தான் கடைசி நாள்…! ஆன்லைன் மூலம் உடனே பதிவிறக்கம் செய்ய வேண்டும்…!

தேசிய வருவாய்‌ வழி உதவித்தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பப்‌ படிவங்களை பதிவிறக்கம் நாளை தான் கடைசி நாள்.

2022- 2023-ம்‌ ஆண்டிற்கான தேசிய வருவாய்‌ வழி மற்றும்‌ திறன்‌ படிப்புதவித்‌ தொகைத்‌திட்டத்‌ தேர்வு (NMMS) 25.02.2023 சனிக்கிழமை, அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ எட்டாம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி மாணவர்கள்‌ இணையதளம்‌ மூலமாக விண்ணப்பப்‌ படிவங்களை நாளை மாலை வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம்‌ வகுப்பு பள்ளி மாணவர்களின்‌ விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்‌ https://dgel.tn.gov.in எனும்‌ இணையதள முகவரி மூலமாக 25.01.2023 மாலை 6 மணி வரை பதிவேற்றம்‌ செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப்‌ போலவே இந்த வருடமும்‌ EIMS-ன்‌ அடிப்படையில்‌ மாணவர்களின்‌ பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான USER ID, PASSWORD- ஐ பயன்படுத்தி மாணவர்களின்‌ EMIS எண்ணினை பதிவு செய்தவுடன்‌ விவரங்கள்‌ உடனடியாக திரையில்‌ தோன்றும்‌. அவ்விவரங்களில்‌ ஏதேனும்‌ திருத்தங்கள்‌ இருப்பின்‌, திருத்தங்களை மேற்கொள்ளவும்‌, விடுபட்டுள்ள விவரங்களையும்‌, புகைப்படத்தையும்‌ பதிவேற்றம்‌ செய்தால்‌ போதுமானதாகும்‌.

முதன்முறையாக இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும்‌ புதிய பள்ளிகள்‌, இணைப்பில்‌ குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவு செய்த பின்‌ புதிய USER ID, PASSWORD- ஐ பயன்படுத்தி மாணவர்களின்‌ விவரங்களை பதிவேற்றம்‌ செய்து கொள்ளலாம்‌ .

Vignesh

Next Post

ஆரம்பம்...! தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 மடங்கு...! வானிலை மையம் தகவல்...!

Thu Jan 19 , 2023
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி […]

You May Like