fbpx

நோட்..! தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

தொழில்நுட்ப கல்வித்துறையால் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய வணிகவியல் தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டது. நாளை கடைசி நாள் என்பதால் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் பிப்ரவரி 2 முதல் 4-ம் தேதி வரை திருத்தம் செய்துகொள்ளலாம். இதற்கு எவ்வித அபராத கட்டணமும் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பதாரர்கள் www.,tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பத்தில் ஜனவரி 31-ம் தேதிக்குள் திருத்தம் செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியிடப்படும். சுருக்கெழுத்து அதிவேக (ஹை ஸ்பீடு) தேர்வு பிப்ரவரி 15 மற்றும் 16ம் தேதியும் சுருக்கெழுத்து இளநிலை, இடைநிலை முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 22 மற்றும் 23-ம் தேதியும், கணக்கியல் இளநிலை, முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 24ம் தேதியும், தட்டச்சு இளநிலை, முதுநிலை அதிவேக தேர்வுகள் மார்ச் 1 மற்றும் 2ம் தேதியும் நடைபெற உள்ளன.

English Summary

Tomorrow is the last day to apply online for typing and shorthand exams.

Vignesh

Next Post

உப்புக் கரை படிந்த உங்க பழைய பக்கெட்டை புதுசு போல் மாற்ற வேண்டுமா? அப்போ உடனே இதை செய்யுங்க..

Thu Jan 30 , 2025
easy way to clean old bucket

You May Like