fbpx

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்…! நாளை தான் கடைசி நாள்…!

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் பெற நாளை கடைசி நாள் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு வரும் ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் பெற நாளை கடைசி நாள். அடையாறு, எம்கேபி நகர், பாடியநல்லூர், குன்றத்தூர், அயனாவரம், வடபழனி உள்ளிட்ட மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை, பேருந்து நிலையம் என 42 இடங்களில் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் பணிமனை அலுவலகத்தில் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் டோக்கன் வழங்கப்படும்.

சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகளை புதிதாக பெற, இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று மற்றும் 2 வண்ண புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

English Summary

Tomorrow is the last day to get free bus travel tokens for senior citizens

Vignesh

Next Post

உஷார்!. அதிக ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துகிறீர்களா?. இந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும்!. நிபுணர்கள் கூறுவது என்ன?.

Thu Jan 30 , 2025
Be careful! Are you using too much olive oil? This will cause problems!. What do the experts say?

You May Like