வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நாளை திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும். இருப்பினும், பள்ளி, கல்லூரிகளில் அன்றைய தினம் நடத்தப்பட்ட தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் துணை கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும்.
செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால், அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகின்ற சனிக்கிழமை அன்று ஈடு செய்யும் வகையில் பணி நாளாக இருக்கும் என ஆட்சியர் எம்.பிரதீப்குமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.