நாளை காலை 6 மணி முதல் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு என்பது அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. கல்வி தொடர்புடையது. வாங்கித் தரமுடியவில்லை.. இவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள். 2018ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி, சுவற்றையெல்லாம் உடைத்துக் கொண்டு திருட்டுத்தனமாகச் சென்றார். வீட்டில் சுவரொட்டி ஓட்டுவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். முடிந்தால் வரச் சொல்லுங்கள். ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தை ஏதோ செய்வதாக தெரிவித்திருந்தார், தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள்” என சவால் விட்டு பேசியிருந்தார்.
இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”தனி ஆளாக அண்ணாசாலைக்கு வருகிறேன். முடிந்தால் என்னை திமுகவின் மொத்த படையையும் வைத்து தடுத்துப் பாருங்கள்” என்று சவால் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ”உதயநிதி கடந்த காலங்களில் தரமில்லாமல் பேசியிருக்கிறார். அப்படி பேசினால், தரமில்லாத பதில்தான் வரும். கல்விக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
அதேபோல், நாளை காலை 6 மணி முதல் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யவுள்ளதாகவும், திமுக ஐடி விங்கிற்கு இன்னும் ஒரு நாள் அவகாசம் உள்ளதால், என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யட்டும் என்றும் அண்ணாமலை பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
Read More : அமைச்சர்கள் தற்குறியா..? அண்ணாமலையை விளாசிய அமைச்சர்..!! முதல்வரை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை..!!