மக்களவைத் தேர்தலை அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல். “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்.” இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.
“தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே” என்னும் கழக நிறுவனர், புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். மாண்புமிகு நம் அம்மா அவர்கள் உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்.” என தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா அழைப்பு விடுத்திருந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
Read More: தமிழ்நாட்டில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது..!! இந்த மாவட்டங்களுக்கு அலர்ட்..!!