fbpx

அதிக மன அழுத்தமா..? மாரடைப்பு ஏற்படும் அபாயம்..!! எச்சரிக்கும் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை..!!

அதிக மன அழுத்தம் இருந்தால் இதய ரத்த குழாயில் பாதிப்பு ஏற்படலாம் என்று சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் இதய நல முதுநிலை மருத்துவ நிபுணர் மருத்துவர் எஸ்.தணிகாசலம், பேராசிரியர் நாகேந்திர பூபதி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பொதுவாக சர்க்கரை நோய், உயர் கொழுப்பு சத்து, உடல் பருமன், புகைப் பிடித்தல், போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் இதய ரத்த குழாய்களில் அடைப்பு மற்றும் சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், அத்தகைய எந்த பாதிப்பும் இல்லாமல் 60 வயது பெண் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதில், இதய ரத்த குழாயில் லேசான அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதற்கு அடுத்த நாளில் அவருக்கு நெஞ்சுவலி அதிகரிக்கவே, மீண்டும் மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் ரத்த குழாயில் பெரும் கிழிசல் இருந்ததும், அதனால், ரத்த ஓட்டம் தடைபடுவதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் மன அழுத்தத்தை குறைப்பது உள்ளிட்ட பயிற்சிகளும், மருத்துவ அறிவுரைகளும் அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டன. பொதுவாகவே 50 – 60 வயது வரையிலான பெண்களுக்கு அதிக மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் இருக்கும்போது இதய ரத்த குழாய்களில் கிழிசல் ஏற்படுகிறது. அத்தகைய பாதிப்புகள் உள்ள பெண்கள் நெஞ்சு வலி ஏற்பட்டால், அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

Read More : உயிரை பறிக்கும் Mpox வைரஸ்..!! உலகம் முழுவதும் பரவும் அபாயம்..!! எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!!

English Summary

According to Sri Ramachandra Hospital, Borur, Chennai, if there is too much stress, it can cause damage to the heart blood vessel.

Chella

Next Post

புதுசா வீடு கட்ட போறீங்களா..? அதிரடியாக வந்த மாற்றம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tue Aug 13 , 2024
It has been announced that under the Pradhan Mantri Awas Yojana 2.0 scheme, urban households earning up to Rs 9 lakh per annum can avail loan interest subsidy.

You May Like