2024-ம் ஆண்டு 24 நாட்கள் பொது விடுமுறை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விடுமுறை பட்டியல்
இன்று புத்தாண்டு தொடங்கி இந்த மாதத்தில் ஆறு பொது விடுமுறைகள் உள்ளன. இதில் ஜனவரி 15 பொங்கல் ஜனவரி 16 திருவள்ளூர் தினம், ஜனவரி 17 உழவர் திருநாள் , ஜனவரி 25 தை பூசம் மற்றும் ஜனவரி 26 குடியரசு தினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 29 அன்று புனித வெள்ளி விடுமுறை. ஏப்ரல் மாதத்தில் ஐந்து அரசு விடுமுறைகள் உள்ளன. ஏப்ரல் 1 வங்கி விடுமுறை, ஏப்ரல் 9 தெலுங்கு புத்தாண்டு, ஏப்ரல் 11 ரம்ஜான், ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் பிறந்த நாள், ஏப்ரல் 21 மகாவீர் ஜெயந்தி ஆகிய தேதிகளில் விடுமுறை.
தொடர்ந்து, மே 1 மே தினம், ஜூன் 16 பக்ரீத் விடுமுறை. ஜூலை 17 மொஹரம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 26 கிருஷ்ண ஜெயந்தி , செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 16 மிலாது நபி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 11 ஆயுதபூஜை , அக்டோபர் 12 விஜய தசமி, அக்டோபர் 31 தீபாவளி உட்பட நான்கு விடுமுறைகள் உள்ளன. டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.