fbpx

பட்டியலின பெண் தொட்டதால் தீட்டான தண்ணீர் தொட்டி? மாட்டு கோமியத்தை கொண்டு கழுவிய சம்பவத்தால் பரபரப்பு …!!

பட்டியலினத்தவர் குழாயை தொட்டுவிட்டதால் ’தீட்டு’ பட்டுவிட்டதாக… மாட்டின் கோமியத்தை வைத்து தீட்டை போக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படத்தியுள்ளது.

பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஹெகோதாரா என்ற கிராமம் உள்ளது. எனவே அந்த ஊருக்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருக்கின்றார். தண்ணீர் தாகம் எடுத்ததால் தன் கையால் குழாயை திருப்பி தண்ணீர் குடித்துள்ளார்.

இதைக் கண்ட மேல்தட்டு மக்கள் அந்த பெண்ணை அழைத்து, ’’நீ யார்? எங்கிருந்து வருகின்றாய்… என கேட்டுள்ளனர். பின்னர் எந்த ஜாதி எனவும் கேட்டு அறிந்து கொண்டனர். அந்த பெண் ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவர் என தெரியவந்ததும் அனைவரும் ஆதங்கப்பட்டனர். எப்படி அதில் நீ தண்ணீர் குடிக்கலாம் என அனைவரும் ஒவ்வொருவராக ஒன்று கூடினர்.

பின்னர் அந்த குழாயை தொடக்கூடாது என கட்டளையிட்டுள்ளனர். தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த பெண் அப்படியே அங்கிருந்து சென்றிருக்கின்றார். பின்னர் மேல்தட்டு மக்கள் என கூறப்படும் சிலர் அனைவரும் கூடி பேச்சு நடத்தி உள்ளனர். தீட்டாகிவிட்டது.. இதை இப்படியே பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளனர். எனவே தொட்டியில் இருந்த தண்ணீர் காலியாகும் வரை தண்ணீரை திறந்து காலி செய்துள்ளனர்.

பின்னர், மாட்டுக் கோமியத்தை கொண்டு வந்து தொட்டி முழுவதும் தெளித்து சுத்தமாக்கினர். குழாயையும் கோமியத்தால் சுத்தமாக்கினர். இந்த விவகாரம் வெளியே தெரியவந்ததை அடுத்து வட்டாட்சியர் பசவராஜ் வந்து தீண்டாமை நடந்திருப்பதை உறுதி செய்தார். பின்னர் அந்த பெண் யார் எங்கே  சென்றார் எனவும் விசாரித்து வருகின்றனர்.இதற்கு எதிரான சட்ட நடைமுறைகள் பற்றியும் ஆலோசித்து வருகின்றனர்.

இதே கர்நாடகத்தில்தான் பெண்களை மகாலட்சுமியாக பார்க்கும் சம்பிரதாயமும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி விரதம் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண்கள் வரலட்சுமி பூஜை மேற்கொள்வார்கள். யாரெல்லாம் வீட்டுக்கு வருகின்றார்களோ அவர்களை மகாலட்சுமியாக பாவித்து மஞ்சள் பூசி, குங்குமம் அளித்து தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு வழங்குவதை சம்பிரதாயமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி…!!

Mon Nov 21 , 2022
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் 26ம் தேதி முதல் 412 நீட் பயிற்சி மையங்களில் நேரடியாக பயிற்சி தொடங்குகின்றது. தமிழ்நாட்டில் நீட் அமல்படுத்தப்பட்டவுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2017ம் ஆண்டு முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 412 பயிற்சி மையங்கள்அமைக்கப்பட்டு அதன் மூலம் நேரடியாக பயிற்சி அளிக்கப்படுகின்றது. 20221-2022ம் கல்வியாண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன், மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் ஆய்வகம் மூலம் […]

You May Like