fbpx

சுற்றுலாப் பயணிகளே நோட் பண்ணிக்கோங்க..!! வரும் 26ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை..!!

மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் ரம்மியாக உள்ளது. கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும், அரசின் சார்பில் ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு கண்காட்சி நடத்தப்படுவதற்கான ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனைக்குப் பிறகு கோட்டாட்சியர் ராஜா செய்தியாளர்களை .அப்போது அவர் கூறுகையில், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் 26ஆம் தேதி துவங்கும் மலர் கண்காட்சி ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, ராமச்சந்திரன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.கோடை விழாவில் சிறப்பம்சமாக விளையாட்டு போட்டிகள், படகு போட்டிகள், நாய் கண்காட்சி உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

Chella

Next Post

217 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்…..! குஜராத்தில் கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டு பிரஜை…..!

Sat May 13 , 2023
குஜராத் மாநிலத்திற்குள் கடல் மூலமாக போதை பொருள் கடத்தி வரப்படுவது தொடர்பாக நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரை குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில், குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டம், பத்தரி தாலுகாவில் ஹெராயின் போதை பொருளை பதுக்கி வைத்திருப்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, 31 கிலோ ஹெராயினை தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் […]

You May Like