Ramayana: புத்த சாஸ்திரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இராமாயணக் கதைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சீனப் பல்கலைக்கழக அறிஞர்கள் கூறுகின்றனர், இது முதன்முறையாக, நாட்டின் பழமையான வரலாற்றில் இந்து மதத்தின் தாக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.
சீனாவில் உள்ள இந்திய துாதரகம் சார்பில், ராமாயணம் தொடர்பான கருத்தரங்கம் பீஜிங்கில் நடந்தது. இதில் பங்கேற்ற பல சீன வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், சீனாவில், ராமாணயத்தின் சுவடுகள் இருந்ததாகக் கூறியுள்ளனர். ஷின்குவா பல்கலைக்கழக சர்வதேச மையத்தின் தலைவர் டாக்டர் ஜியாங் ஜிங்குய் கூறியுள்ளதாவது, இந்தியாவின், குறிப்பாக ஹிந்து மதத்தின் மிகப் பெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம், பல நுாற்றாண்டுகளுக்கு முன், சீனாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக புத்த மத நுால்களின் வாயிலாக, ராமாயணம் சீனாவில் அறிமுகமானது.
இது, சீனாவின் முக்கியமான ஹான் கலாசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் கலாசாரம் குறித்த புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகிறது. ராமாயணத்தில் உள்ள தசரசன், ஹனுமான் ஆகியோரின் பெயர்கள், இந்த கலாசாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Readmore: இந்தியாவில் அதிக அசைவம் சாப்பிடும் மக்கள்!. தமிழ்நாடு முதலிடம்?. தரவரிசை பட்டியல் விவரம் இதோ!.