fbpx

சென்னையில் தொடரும் சோகம்!… எருமை மாடு முட்டியதில் முதியவர் பலி! சாலையில் நடந்து செல்ல அச்சப்படும் மக்கள்!…

சென்னை நங்கநல்லூரில் சாலையில் நடந்து சென்றபோது எருமை மாடு முட்டியதில் முதியவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நங்கநல்லூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா காலனி பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் சந்திரசேகர். இவர், நேற்றுமாலை சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, அங்கு சண்டையிட்டுக்கொண்டிருந்த எருமை மாடுகள் திடீரென சந்திரசேகரை முட்டி தள்ளின. இதில் படுகாயங்களுடன் மயங்கிவிழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழவந்தாங்கல் போலீசார், முதியவரின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், கடந்த மாதம் 21ம் தேதி தாம்பரம் அருகெ உள்ள மாடம்பாக்கத்தில் மாடு முட்டியதில் முதியவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் அவ்வபோது விபத்துகள் நிகழ்வதாகவும் எனவே அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் மாடுகளை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Kokila

Next Post

மழை செய்திகள் வந்தாலே போதும்!… பள்ளி லீவான்னு கேட்டு போன் பண்ணுறாங்க!… தஞ்சை ஆட்சியர் வருத்தம்!

Wed Jan 10 , 2024
மழை பெய்து விட்டாலே போதும் இன்றைக்கு பள்ளிக்கு லீவ் விடுவாங்களா? என்ற எதிர்பார்ப்பு இன்றைய தலைமுறை மாணவர்களிடம் அதிகரித்துள்ளது. வெளியில் லேசாக வானம் இருட்டி விட்டாலே போதும் மழை பெய்யுமா என வானத்தையே பார்த்துக்கொண்டு இருப்பதோடு அவ்வப்போது டிவி முன் உட்கார்ந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக ஏதாவது ஒரு அறிவிப்பு வந்து இருக்குதா என்று மாணவர்கள் பார்ப்பதை காண முடிகிறது. இந்த நிலையில், மழை தொடர்பான எச்சரிக்கை […]

You May Like