Nigeria: தெற்கு நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர்.
நைஜீரியாவில் ரயில் பாதைகள் இல்லாததால், சாலைகள் பெரும்பாலும் பொருட்களை கொண்டு செல்லப் பயன்படுகின்றன. மேலும் அந்த சாலைகள் மோசமான நிலையில் இருப்பதால் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. அதிலும், பெட்ரோல் டேங்கர் லாரிகள் வெடித்து ஏற்படும் விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிர்சேதங்களும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்தநிலையில் மீண்டும் தெற்கு நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இனுகு மாகாணத்தில் நேற்று மாலை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி முன்னே சென்ற 17 வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.