fbpx

சோகம்!. பிரபல பாலிவுட் இயக்குனர் ஷியாம் பெனகல் காலமானார்!. உலகளவில் இந்திய திரைப்படங்களுக்கு அங்கீகாரம், அடையாளம் கொடுத்தவர்!

Shyam Benegal: சர்வதேச அளவில் இந்திய திரைப்படங்களுக்கு அங்கீகாரம், அடையாளத்தை ஏற்படுத்திய, பிரபல பாலிவுட் இயக்குனர் ஷியாம் பெனகல், 90, உடல் நலக் குறைவால் நேற்று காலமானார்.

கடந்த, 1970 மற்றும் 1980களில் பல விருது பெற்ற படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஷியாம் பெனகல். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவர் நேற்று மாலை உயிரிழந்தார்.

உலகப் புகழ்பெற்ற ஷியாம் பெனகல், மனித உறவுகள் மற்றும் வாழ்க்கையின் எதார்த்தத்தை விளக்கும் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய, அங்கூர் என்ற ஹிந்தி படம், இந்திய சினிமாவின் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. சர்வதேச அளவில், இந்திய திரைப்படங்களுக்கு இதன் வாயிலாக அங்கீகாரம் கிடைத்தது.

மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள திரைப்பட மையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் இயக்கிய, அங்கூர், பூமிகா, ஜூனுன், அரோஹன், மந்தன் உள்ளிட்ட ஏழு படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். இவர் ஒட்டுமொத்தமாக, 18 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். பல குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

Readmore: உஷார்!. டோலோ 650 உலகின் மிக ஆபத்தான மருந்து?. உண்மை என்ன?

Kokila

Next Post

தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்..! உங்க ஏரியா இருக்கா..? முழு விவரம்…!

Tue Dec 24 , 2024
Areas of power cut in Tamil Nadu today..! Is there an area here? Full Details...!

You May Like