திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள தாமரைக்குப்பம் கிராமத்தில் ரசாக் (28), என்கிற கூலித்தொழிலாளி தன்னுடைய மனைவி ஜெரினா (24) மற்றும் மகன் அஜ்மீர் (2) வாழ்ந்த வந்துள்ளார். சென்ற 10ம் தேதி அன்று , ஜெரினா மகனை குளிக்க வைப்பதற்காக வெந்நீர் போட்டு அதனை பாத்திரம் ஒன்றில் ஊற்றி வைத்துள்ளார்.
இந்த நிலையில், அதனருகில் குழந்தை விளையாடிக் கொண்டு இருந்தது. சோப்பு மற்றும் துண்டை எடுக்க வீட்டிற்குள் ஜெரினா சென்றுள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த மகன் எதிர்பாராத விதமாக கால்கள் இடறி திடீரென வெந்நீருக்குள் விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து குழந்தை வீரிட்டு அழுதுள்ளது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தொடர்ந்து குழந்தை நாட்களாக சிகிச்சை பெற்று வந்தது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. வெந்நீரில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.