fbpx

#நாமக்கல்: தாயின் கண்ணெதிரே குழந்தை மிஷினில் நசுங்கி உயிரிழந்த சோகம்..!

நாமக்கல் மாவட்ட பகுதியில் உள்ள ஒலப்பாளையத்தில் வசிப்பவர் பிரபாகரன். இவரது நார்மிலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாரம் மற்றும் மனைவி மனிஷாதேவி இருவரும் வேலை பார்த்து வருகின்றனர். 

இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை தீஸ்குமார் எனபவர் உள்ளார். இந்த நிலையில், மனிஷாதேவி தனது குழந்தை தீஷ்குமாரை மடியில் வைத்து கொண்டே தேங்காய் நார் மில்லில் மிஷினில் வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். 

மடியில் விளையாடிக் கொண்டிருந்த தீஷ்குமார் திடீரென ஓடிக்கொண்டிருக்கும் மிஷனின் பெல்ட்டில் கையை வைத்துள்ளார். சட்டென்று குழந்தை மிஷினுக்குள் இழுத்து சென்றது.  தாயின் கண்ணெதிரே குழந்தை தீஷ்குமார் மிஷினில் சிக்கி உடல் நசுங்கியது.

இதனை தொடர்ந்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீஷ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கே குழந்தை தீஷ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பரமத்திவேலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Baskar

Next Post

30 வயதிற்கு பிறகு கர்ப்பம் தரிப்பது கஷ்டமா? கவலைய விடுங்க இந்த டிப்ஸ்களை ஃபாலோவ் பண்ணுங்க போதும்…!

Thu Jan 12 , 2023
ஆரோக்கியமான உணவுகள்: ஆரோக்கியமான கருவை உருவாக்க 3 வேளை டயட்டிலும் ஏராளமான பழங்கள், சத்தான காய்கறிகள், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டின் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கிய சத்தான உணவுகளை மாறி மாறி இடம்பெற செய்ய வேண்டும். கேரட் சாப்பிடுவது பெண்களுக்கு கர்ப்ப கால ரத்த சோகையை  தவிர்க்க உதவுகிறது. பொதுவாக கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதிகள் ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கிய உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த தருணத்தில் நொறுக்குத் தீனிகளை […]

You May Like