fbpx

விஷ சாராயம்: பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு!. தமிழகத்தை உலுக்கிய துயர சம்பவம்!

Poisonous liquor: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோமுகி ஆற்றங்கரை அருகே நந்தவனம் பகுதியில் 18ம்தேதி இரவு சாராயம் வாங்கி குடித்த பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. அவர்களுக்கு வயிற்று வலி, கண்பார்வை இழப்பு என பாதிப்புகள் ஏற்பட்டன. முதலில் அடுத்தடுத்து 2 பேர் இறந்தனர். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 85க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

நாட்டையே உலுக்கிய இந்த கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பவத்தில், நேற்று முன்தினம் காலையில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இவர்களில் நேற்று முன்தினம் 17 பேர் இறந்தனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 27 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 15 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேர், புதுவை ஜிப்மரில் 3 பேர் என மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஐ தொட்டுள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்குள் இந்த விவகாரத்தில் இந்த விசாரணை ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: பாரமுல்லா என்கவுன்டர்!. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாக்., லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடையவர்கள்!

English Summary

Poisonous liquor! Death toll rises to 42!

Kokila

Next Post

அதிரடி நடவடிக்கை...! மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி பணியிட மாற்றம்...!

Fri Jun 21 , 2024
Prohibition Enforcement Division Additional DGP Transfer.

You May Like