தருமபுரி மாவட்ட பகுதியில் உள்ள பென்னாகரத்தினை அடுத்துள்ள ஏரியூர் அருகில் குமரன் (70) என்ற கூலித் தொழிலாளி தனது இளைய மகன் தங்கராஜ்(40) லாரி வைத்து தொழில் செய்து வருபவருடன் வசித்து வருகிறார். இளைய மகனுக்கு திருமணமாகி நிலையில் மனைவி ராஜேஷ்வரி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.
தங்கராஜ் புதிதாக வீடு கட்டி வந்த நிலையில் சொல்லிய காலத்திற்குள் கட்டுமான பணியை முடிக்கவில்லை. இதன் காரணமாக தங்கராஜ் மற்றும் கட்டுமான பணி செய்யும் ஒப்பந்ததாரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கட்டுமான பணியானது பாதியிலே நின்றுள்ளது.
இதனால் அதிக கோபமடைந்த தங்கராஜ் , கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்துள்ளார். மேலும் நேற்று காலை வீட்டில் இருந்த தந்தை குமரனை, இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழந்தார். அத்துடன் கோபம் தீராத தங்கராஜு அந்த வழியே வந்த பால் வண்டி ஓட்டுநரை தாக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து கிராம மக்கள் தங்கராஜ் மீது புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.