fbpx

மக்களே…! டிசம்பர் 15-ம்‌ தேதிக்குள் இதை செய்து முடிக்க வேண்டும்….! கால அவகாசம் மேலும் நீட்டிப்பு….!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், ‘வரைவு தொலைத்தொடர்பு சேவைகள் இணைப்பு ஒழுங்குமுறை விதிகள் 2022 குறித்து துறைசார்ந்தவர்களிடமிருந்து கருத்துகள், எதிர் கருத்துகளுக்கான கால அளவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. துறைச்சார்ந்தவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான கருத்துகளைப் பெறுவதற்கான கடைசித் தேதி அக்டோபர் 7, 2022 என்றும், எதிர் கருத்துகள் ஏதேனும் இருந்தால், அக்டோபர் 21, 2022 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

துறைச்சார்ந்தவர்களில் சிலர் வேண்டுகோள் விடுத்ததின் பேரில், எழுத்துப்பூர்வ கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 4 நவம்பர் 2022 வரை என்றும் எதிர் கருத்துகளுக்கு, ஏதேனும் இருந்தால், கடைசி தேதி நவம்பர் 18, 2022 வரை என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர் கருத்துகள் ஏதேனும் இருந்தால், டிசம்பர் 2, 2022க்குள் சமர்ப்பிக்கலாம். மேலும் நீட்டிப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது. கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை – advbcs-2@trai.gov.in மற்றும் jtadv-bcs@trai.gov.in. போன்ற மின்னஞ்சலில் அனுப்பலாம். கூடுதல் தகவல்களுக்கு, அனில் குமார் பரத்வாஜ், ஆலோசகரை 91-11-23237922 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Vignesh

Next Post

திரைப்பட விளம்பரத்துக்கும் இது கட்டாயம்...! மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்...! மத்திய அரசு அதிரடி

Sun Nov 13 , 2022
திரைப்பட விளம்பரங்களில் கட்டாயம் சான்றிதழ் வகையை குறிப்பிட வேண்டும் தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பாலமுரளி வெளியிட்ட செய்தி குறிப்பில்: தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு மத்திய சான்றளிப்பு வாரியம் (சிபிஎஃப்சி) வழங்கும் தணிக்கை சான்றிதழின் வகையை விளம்பரங்களில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று சிபிஎஃப்சி அறிவுறுத்தியுள்ளது. சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட […]

You May Like