டெலிகாம் நிறுவனங்கள் மொபைல் வேலிடிட்டிக்களை 28 நாட்கள் வரை மட்டுமே வழங்குவதால் 30 நாட்களுக்கு வேலிடிட்டி அளிக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , ’’ மொபைல் நிறுவனங்கள் மாதத்தின் கடைசி நாளில் புதுப்பித்துக் கொள்வது போல இருக்கலாம். அதுபோன்ற பிளான் எந்த நிறுவனமும் அளிக்கவில்லை. டெலிகாம் சேவை அளிப்பவர்கள் … குறைந்த பட்சம் ’’ஒன் பிளான் வவுச்சர் ’’, சிறப்பு பிளான் வவுச்சர் மற்றும் இரண்டு அல்லது 3 திட்டங்களின் தொகுப்பு போன்றவற்றை 30 நாட்களாக அளிக்க வேண்டம்.
ஒரு வேளை அந்த தேதி குறிப்பிட்ட மாதத்தில் இல்லை என்றால் அந்த மாதத்தின் இறுதி நாளை புதுப்பிக்கக்கூடிய நாளாக வைக்க வேண்டும். ஒவ்வொரு டெலிகாம்் சேவை வழங்கும் நிறுவனமும் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும். அல்லது அதே தேதியில் அடுத்த மாதம் சேவையை தொடரும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்க வேண்டும். ஒரு சில பிளான்களில் இத்தகையபுதுப்பிக்கும் வசதி இல்லை. என தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை அடுத்து ஏர்டெல் , ஜியோ, வி.ஐ. , பிஎஸ்என்எல் நிறுவனங்கள் தற்போது 30 நாள் பிளான்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் புதுப்பித்துக் கொள்ளலாம். இதுவரை 28 நாட்கள் , 25 நாட்கள் , 26 நாட்கள் என்ற பிளான்கள் நடைமுறையில் இருந்தது.

இதனால் .. நாம் ரீசார்ஜ் செய்த சில நாட்களிலேயே புதுப்பிக்க வேண்டி வரும். அட , அதுக்குள்ள 25 நாள் ஆகிவிட்டதா ? என நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம். சில நேரங்களில் மாத இறுதியாக இருந்தால் ரீசார்ஜ் செய்யாமல் விட்டுவிடுவோம். எனவே 30 நாட்கள் வழங்கப்பட்டால் அனைவருக்கும் இது சிறந்த திட்டமாக இருக்கும். எனவே ட்ராய் இந்த உத்தரவை நேற்று அறிவித்திருந்தது. தற்போது சில நிறுவனங்கள் புதிய சலுகைகளை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.