fbpx

அசத்தல் அறிவிப்பு…! மகளிர் சுயதவிக் குழுக்களை சேர்ந்த 12,000 பெண்களுக்கு பயிற்சி…!

மகளிர் சுயதவிக் குழுக்களை சேர்ந்த 12,000 பெண் தொழில்முனைவோர்களுக்கு ரூ.1.56 கோடியில் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கையின் பொழுது பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் தென்னை நார் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு 25% மானியம் வழங்கப்படும். மகளிர் சுயதவிக் குழுக்களை சேர்ந்த 12,000 பெண் தொழில்முனைவோர்களுக்கு ரூ.1.56 கோடியில் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றார்.

வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க திட்ட உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும். இதற்கான மானியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.3.75 லட்சமாக உயர்த்தப்படும். ரூ.175 கோடியில் தொழில் முனைவோருக்கு உடன் பயன்படத்தக்க அடுக்குமாடி தொழில் வளாகம் கிண்டியில் உருவாக்கப்படும். இதன் மூலம் 2200 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றார்.

Vignesh

Next Post

ஆளுனரே உங்களுக்கு அதிகாரம் ஒன்னும் கிடையாது...! முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்...!

Fri Apr 7 , 2023
தி கிரேட் டிக்டேட்டராக தன்னை ஆளுநர் நினைத்துக்கொள்ள வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது அவர் தனது அறிக்கையில்; பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். […]

You May Like