fbpx

TRB முக்கிய அறிவிப்பு…! பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!

இது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 03/2023, நாள் 25.10.2023 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 07.12.2023 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மிக்ஜாம் (Michaung) புயல் மழையின் காரணமாக மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 07.12.2023 லிருந்து 13.12.2023 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இதனைதொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள விரும்பினால் 14:122023 மற்றும் 15.12.2023 ஆகிய இரண்டு நாள்களுக்கு திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஃபேஸ்புக் - இன்ஸ்டாகிராம் கனெக்சனை கட் செய்த மெட்டா.! புதிய அறிவிப்பால் அதிர்ச்சியில் இணையவாசிகள்.!

Fri Dec 8 , 2023
பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றை மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் இடையேயான ஒரு சேவையை நிறுத்த இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இது இணையதளவாசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையதளங்கள் மெட்டா நிறுவனத்தின் கீழ் கடந்து 2020 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது. அப்போது பேஸ்புக் மெசஞ்சர் வசதியை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு கால் மற்றும் குறுஞ்செய்திகள் செய்யும் […]

You May Like