தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஷால். இவர், தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடித்துள்ள ”மதகத ராஜா” திரைப்படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இதில் விஷால் கை நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் காணப்பட்டார்.
அவரை படக்குழுவினர் கைத்தாங்கலாக பிடித்து சேரில் அமர வைத்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்த நிலையில், பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். இதற்கிடையே, அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், காய்ச்சலுடனே ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
மேலும், நடிகர் விஷால் அவன் இவன் படத்தில் நடித்த போது மாறுகண் இருப்பது போல நடித்திருந்தார். அப்போதில் இருந்தே அவருடைய கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. இதனால் ஸ்டீராய்டு போன்ற சிகிச்சைகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்ததால், தலைமுடி கொட்டி இப்படி கை நடுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், நடிகர் விஷால் தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் அவர் சில காலங்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது ரசிகர்கள் விஷாலுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Read More : “உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்”..!! உடைக்கப்படும் சென்னையின் 40 ஆண்டுகால அடையாளம்..!!