அண்ணாமலையின் வலது கரமாக செயல்பட்டு வந்த திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து பாஜகவிற்கு எதிராக பலவித கருத்துகளை சமூகவலைதளத்தில் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அண்ணாமலை குறித்து திருச்சி சூர்யா யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், திருச்சி சூர்யா கூறும் போது, அண்ணாமலை ஐபிஎஸ் பயிற்சியின் போதே அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக ஐபிஎஸ் பதவியில் இருக்கும் போது அண்ணாமலை தேமுதிக தலைவராக இருந்த விஜயகாந்தை அவரது வீட்டில் சென்று சந்தித்து பேசியதாகவும். அப்போது தான் தேமுதிகவில் இணைய விரும்புவதாக விஜயகாந்திடம் அண்ணாமலை கூறியதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு விஜயகாந்த், அண்ணாமலைக்கு இரண்டு மணி நேரம் அட்வைஸ் செய்ததாக கூறுகிறார், நல்ல பதவியில் இருக்கீங்கள், நல்ல இடத்தை அடைந்துள்ளீர்கள், இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே அதிகாரத்தில் உள்ளீர்கள். கஷ்டம் என வருபவர்களுக்கு உதவி செய்யுங்கள், சட்டம் ஒழுங்கை சரியாக கவனியுங்கள் எனக்கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து தான் பாஜகவின் மூத்த நிர்வாகி பி எல் சந்தோஷ் தொடர்பு கிடைக்க ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைய அண்ணாமலை முடிவெடுத்தார். பதவியை ராஜினாமா செய்த பிறகு ஒரு வருடம் கழித்து தான் பாஜக மாநில துணை தலைவர் பதிவியும், அதனைத்தொடர்ந்து தான் பாஜக மாநில தலைவர் பதவியும் கிடைத்தது என்றார்.