‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற ஒற்றை பாடல் மூலம் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் கிராமிய கலைஞர் கிடாக்குழி மாரியம்மா. சிவகங்கை மாவட்டம், திட்டக்குடி என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தான் இவர். சிறு வயதிலிருந்தே பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம். எனவே விளையாட்டாக பாடத் துவங்கிய இவர் பின்னர் விசேஷ வீடுகள், சாவு வீடுகள் என பல பாடல்களை பாடி முறையாக கிராமிய பாடல்களை பாட கற்று தேர்ந்தார்.
சில சினிமா பாடல்களை இவர் ஏற்கனவே பாடி இருந்தாலும் இவருக்கு தனி அங்கீகாரத்தை கொடுத்துள்ளது ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல். விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், அனிதா குப்புசாமி என்று ஆய்வாளர்களும் இசையை ஒரு பாடமாகவே படித்தவர்களும் கோலோச்சிக்கொண்டிருந்த நாட்டுப்புற இசையுலகில், கிராமத்துப் பின்புலத்திலிருந்து வந்த மாரியம்மாள் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்.
இப்போதும்கூட, நெடும்பயணங் களில் உணவக நிறுத்தங்களில் அடிக்கடி மாறும் பாடல்களுக்கு நடுவே மாரியம்மாளின் குரலும் எட்டிப்பார்த்துக் கொண்டேதான் இருக்கிறது. கிராமத்து இசை ரசிகர்களுக்கு எப்போதுமே விருப்பத்துக்குரிய பாடகர் அவர். அவரது பாடல்களை இணையத்தின் வழியாகவும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். பின்னூட்டங்களில் வெளிப்படும் நினைவுகள், கடந்த இருபதாண்டுகளுக்கு முந்தைய கிராமத்து வாழ்க்கையின் அடையாளங் களில் மாரியம்மாளின் குரலும் ஒன்றாகிவிட்டதைச் சொல்கின்றன.
Read more : #GetOut கையெழுத்து இயக்கம்.. மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வைக்கப்பட்ட பேனரில் விஜய் முதல் கையெழுத்து..!!