fbpx

TVK Vijay | மகளிர் தினத்தன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!! விஜய் வெளியிட போகும் முக்கிய அறிவிப்பு..!!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி வரும் 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது கட்சியை அறிவித்தார் விஜய். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனவும் விஜய் அறிவித்தார். இதனை ஒட்டியே அரசியல் செயல்பாடுகளை நகர்த்தி வருகிறார். தனது கட்சி சார்பாக விரைவில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், அதன் மூலம் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தனது கட்சி நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகளை விஜய் பிறப்பித்துள்ளார். அதில், “விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க இருக்கிறார்கள். அதற்கான பொதுக்கூட்டம், தேர்தல் பிரச்சாரம் போன்றவையும் சூடிபிடிக்கும். அதனால், நமது கட்சியைச் சேர்ந்தவர்கள் மாற்றுக் கட்சியினரது பரப்புரை, பொதுக்கூட்டங்களுக்குச் செல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளாராம்.

மேலும், உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி வரும் 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பும் ஓரிரு நாட்களுக்குள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Read More : BJP | சூடுபிடிக்கும் பாஜக வேட்பாளர் தேர்வு..!! தமிழ்நாட்டில் யார், யார் போட்டி..? இன்று டெல்லி பறக்கும் அண்ணாமலை..!!

Chella

Next Post

Praggnanandhaa | 'கருப்பு நிற காய்’..!! உஸ்பெகிஸ்தான் வீரரை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார் பிரக்ஞானந்தா..!!

Wed Mar 6 , 2024
பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகின்றனர். இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவை எதிர்கொண்டார். கருப்பு நிற காயுடன் ஆடிய பிரக்ஞானந்தா 56-வது நகர்த்தலில் அப்துசத்தரோவை தோற்கடித்தார். பிரக்ஞானந்தாவுக்கு இது 3-வது வெற்றியாகும். மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் டி. குகேஷ், விதித் […]

You May Like