fbpx

பெரியார் முதல் அஞ்சலையம்மாள் வரை.. தவெக கொள்கை தலைவர்களாக ஏன் இவர்கள்? – விஜய் விளக்கம்

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் கொடி பாடலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கான பெயர் மற்றும் கொடிகான அர்த்தம் குறித்து விவரித்த வீடியோவை நடிகர் விஜய் வெளியிட்டார். விஜய் குரலில் அந்த வீடியோ வெளியானது

அந்த வீடியோவில் தனது கட்சியின் கொள்கை தலைவர்களாக ஏற்றுக்கொண்ட பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரை ஏன் ஏற்றுக்கொண்டோம் என தெரிவித்தார். “பெரியார் எங்கள் கொள்கை தலைவர். கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அரசியலில் அண்ணன் தம்பி உறவை அறிமுகப்படுத்திய அண்ணா சொன்ன மாதிரி – ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்களது நிலைப்பாடும்.

ஆனாலும், பெண் கல்வி பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்த்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை பெரியாரின் இவை அனைத்தையும் முன்னெடுக்கபோகிறோம். பெரியாரை அடுத்து எங்கள் கொள்கை தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர், அவர் இந்த மண்ணில் மதசார்ப்பிண்மைக்கும், நேர்மையான நிர்வாக செயல்பாட்டுக்கும் முன் உதாரணமாக விளங்கும் அவரை எங்கள் வழிக்காட்டியாக ஏற்கிறோம். இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் சாசனத்தை ஆக்கி காட்டியவர் அண்ணல் அம்பேத்கர். வகுப்புவாத பிரதிநிதித்துவத்தையும், சாதிய ஒடுக்குமுறையும் நிலைநிறுத்தபோராடும் மாபெரும் தலைவரான அவரையும் எங்கள் கொள்கை தலைவராக சொல்வதில் பெருமை கொள்கிறோம் என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

Read more ; அனிதாவின் மரணம் என் தங்கை வித்யாவின் மரணத்திற்கு இணையான வலியை தந்தது..!! – தவெக தலைவர் விஜய் உருக்கம்

English Summary

TVK Vijay spoke about why Periyar, Ambedkar, Kamaraj, Velunachiar and Anjali Ammal were accepted as policy leaders.

Next Post

மாநாடு முடிந்து வீட்டிற்கு பத்திரமாக செல்லுங்கள்..!! - தவெக தலைவர் விஜய் வேண்டுகொள்

Sun Oct 27 , 2024
After the conference go home safely..!! - Wish TVK Vijay

You May Like