fbpx

TVK Vijay | டாப் 10 மாணவிகளுக்கு விலையுயர்ந்த பரிசை வழங்கிய விஜய்..!! என்ன தெரியுமா..?

10, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் 10 மாணவிகளுக்கு நடிகர் விஜய் விலையுயர்ந்த பரிசை வழங்கினார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் இன்று கல்வி விருது வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த மாணவ, மாணவிகளுக்கு காலை, மதியம் என இரு வேளையும் சிறப்பு உணவுகள் பரிமாறப்பட்டது.

விழாவுக்கு காலை 10 மணிக்கு வருகை தந்த நடிகர் விஜய், தன்னுடைய உரையை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக முடித்துவிட்டு, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கத் தொடங்கினார். தமிழக அளவில் அதிக மதிப்பெண் வாங்கிய டாப் 10 மாணவிகளுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை மட்டுமின்றி வைர கம்மலையும் பரிசாக வழங்கினார். கடந்த முறை முதலிடம் பிடித்த மாணவிக்கு மட்டும் வைர நெக்லஸ் வழங்கிய விஜய் இம்முறை 10 மாணவிகளுக்கு வைரக்கம்மல் வழங்கினார்.

முதலாவதாக 12ஆம் வகுப்பில் சாதித்த மாணவிகளான, சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியை சேர்ந்த மாணவி பிரதிக்‌ஷாவுக்கு வைரக்கம்மல் வழங்கினார். தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த மாணவி மகாலட்சுமிக்கு வைரக்கம்மல் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்த மாணவி தொஷிதா லட்சுமிக்கு சால்வை அணிவித்தும், சான்றிதழ் மற்றும் வைரக்கம்மல் வழங்கினார் விஜய்.

அடுத்ததாக 10ஆம் வகுப்பு தேர்வில் சாதித்த, தருமபுரி மாவட்டம் கரூர் தொகுதி மாணவி சந்தியாவுக்கு வைரக்கம்மல் வழங்கினார். தருமபுரி மாவட்டம் மரூர் தொகுதியை சேர்ந்த தேவதர்ஷினி, திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த காவியாஸ்ரீ, ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் தொகுதி மாணவி ஆர்.கோபிகா, ராமநாதபுரம் முதுகுலத்தோரை சேர்ந்த மாணவி காவியா ஜனனி, திருநெல்வேலி ராதாபுரம் தொகுதி மாணவி சஞ்சனா உள்ளிட்டோருக்கும் வைரக்கம்மல் பரிசாக வழங்கினார் விஜய்.

Read More : மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்..!! தவெக தலைவர் விஜய்க்கு சீமான் வாழ்த்து..!!

English Summary

Actor Vijay presented expensive prizes to 10 students at the academic award ceremony for 10th and 12th class students.

Chella

Next Post

”முதன்மைக் கண்ணோட்டத்தில் அவர் குற்றவாளி அல்ல”..!! முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Fri Jun 28 , 2024
The Jharkhand High Court has granted bail to former Jharkhand Chief Minister Hemant Soren in the land scam case.

You May Like