fbpx

துப்பரவு தொழிலாளரை துண்டு துண்டாக வெட்டிய கொலை வழக்கில் 8 வருடம் கழித்து வந்த கோர்ட் தீர்ப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டு துப்புரவு தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது தானே நீதிமன்றம். மும்பையைச் சார்ந்த 42 வயது துப்புரவு தொழிலாளர் ஒருவர் 2015 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டன. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்து 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. வழக்கின் இறுதி கட்ட விசாரணைக்கு பிறகு தீர்ப்பளித்த அடிஷனல் செசன்ஸ் நீதிபதி ரக்ஷனா தெஹ்ரா இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு காய்கறி வியாபாரிக்கும், பொது கழிவறை சூப்பர்வைசருக்கு 10000/- ரூபாய் அபதாரம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபருக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கொலை செய்யப்பட்ட நபர் மும்பையில் பொதுக் கழிவறைகளை துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். அவர் தனது கடமைகளை ஒழுங்காக செய்யாத காரணத்தால் பணியில் இருந்து நீக்கப்பட்டு அந்தப் பணி கொலை செய்யப்பட்ட ஒருவரின் சகோதரருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனது பணி பறிக்கப்பட்டதற்காக அந்த நபர்களிடமிருந்து நஷ்ட ஈடாக அடிக்கடி காசு கேட்டு தொந்தரவு செய்து இருக்கிறார் கொலை செய்யப்பட்ட நபர். இதனால் கோபமடைந்த அந்த நபர்கள் இவரை கொலை செய்து இவருடைய உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி நகரின் பல பகுதிகளிலும் வீசி உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட காவல்துறை உண்மையான குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது அனைத்து சாட்சியங்களிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியிருக்கிறது தானே நீதிமன்றம்.

Baskar

Next Post

ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்ட மகளிர் அணி தலைவி கொலை வழக்கில் இருவர் கைது!

Mon Mar 6 , 2023
தென்காசி மாவட்டத்தில் பாமக மகளிர் அணி தலைவி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சார்ந்தவர் முத்தையா. இவரது மகள் மாரியம்மாள். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் குருவிகுளம் யூனியன் மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவில் இலவன்குளம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார் மாரியம்மாள். […]

You May Like