பழனியை அடுத்த பூலாம்பட்டியைச் சார்ந்த சுரேஷ்(39) என்பவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பழனியை அடுத்துள்ள பூலாம்பட்டியை சார்ந்தவர் சுரேஷ் வயது 39 இவர் கடந்த மூன்றாம் தேதி அன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்ததில் இந்தச் சம்பவமானது தற்கொலை அல்ல கொலை என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய அவரது சொந்தக்காரர்களான கருப்பசாமி மற்றும் சுரேஷின் நண்பர் மணிமாறன் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் ” மரணம் அடைந்த சுரேஷ் அதை ஊரைச் சார்ந்த தனது உறவுக்கார பெண்ணான மகேஸ்வரி(44) என்பவருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இந்த மகேஸ்வரி கணவனை இழந்தவர். மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்திருக்கின்றனர். இந்த விஷயம் மகேஸ்வரியின் தம்பி கருப்பசாமி(36) என்பவருக்கு பிடிக்கவில்லை. இதனைப் பற்றி பலமுறை மகேஸ்வரிடம் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை.
இதனைத் தொடர்ந்து அவர் சுரேஷை தீர்த்து கட்ட முடிவு செய்திருக்கிறார் அதற்கு சுரேஷின் நண்பன் மணிமாறனை பயன்படுத்தி சுரேஷ் குடிக்க வைத்திருந்த மதுவில் விஷத்தை கலந்து அதனைக் குடிக்க வைத்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் சுரேஷ் மற்றும் மணிமாறனை கைது செய்து அவர்களின் மீது கொலை வழக்கு பதிந்து சிறையிலடைத்தனர்.