fbpx

முன்னெச்சரிக்கை நடவடிக்கை…! தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் தேசியப் பேரிடர் மீட்புப் படை…!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை முன்னிட்டுக் கேரள மாநில அரசும் கோயில் தேவம்சம் வாரியமும் கேட்டுக் கொண்டதையடுத்து தேசியப் பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் சபரிமலைக்கு செல்கின்றன.

தேசியப் பேரிடர் மீட்புப் படைப் பிரிவின் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செயல்படும் 4 வது படை பிரிவில் இருந்து துணை ஆய்வாளர் உமா மகேஸ்வர் தலைமையில் ஒவ்வொன்றிலும் 30 பேர் என மொத்தம் 60 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் செல்கின்றன.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்படும் பட்சத்தில் அவர்களை உடனடியாக மீட்டு உரிய முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சை அளிப்பது போன்ற பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள். இதற்கு எதுவாக, மீட்பு உபகரணங்கள், ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், கயிறுகள்,.நவீனத் தொலை தொடர்பு சாதனங்கள் ஆகிவற்றுடன் தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் செல்கின்றனர்.

Vignesh

Next Post

SBI வங்கியில் 90-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

Mon Nov 20 , 2023
பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Resolvers பணிகளுக்கு 96 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 62 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.36,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு […]

You May Like