தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரே திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டினையும், சொத்துவரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி “இந்தியாவிலேயே 520 வாக்குறுதிகளை கொடுத்தது திமுகதான் ஆனால் அதனை ஒன்றை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை, மேலும் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதலமைச்சராக பதவியேற்று இருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் 2 லட்சம் கோடி கடன் பெற்று அதனை அடைக்க சொத்து வரி, வீட்டு வரி, விலைவாசியை உயர்த்தியுள்ளதாகவும். கருணாநிதி குடும்பத்தை விட மன்னார்குடி மாஃபியா கும்பலே மேல் என உள்ளது” என்று பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மற்றும் அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.