fbpx

குட் நியூஸ்…! ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை சரிபார்க்க ஆணையம் அனுமதி…!

பயனாளிகள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் குடியிருப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில், தங்களுடைய ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்களுக்குத் தெரியவில்லை என்பது யுஐடிஏஐ கவனத்திற்கு வந்தது.

எனவே ஆதாருடன் தொடர்புடைய ஒரு முறை கடவுச் சொற்கள் வேறு ஏதேனும் எண்ணுக்குப் போய்விடுமோ என மக்கள் கவலைப்பட்டனர். இப்போது, இந்த வசதியின் மூலம், மக்கள் இதை மிக எளிதாகச் சரிபார்க்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://myaadhaar.uidai.gov.in/) அல்லது mAadhaar செயலியில் ‘மின்னஞ்சல்/மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும். குறிப்பிட்ட மொபைல் எண் அவர்களது ஆதாருடன் இணைக்கப்படாத பட்சத்தில் அதனைத் தெரிவிப்பதோடு, அவர்கள் விரும்பினால், மொபைல் எண்ணைப் புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளைகளையும் அதில் அறிந்து கொள்ளலாம்.

ஆதார் பதிவு செய்யும்போது கொடுத்த மொபைல் எண் நினைவில் இல்லை என்றால், mAadhaar தளம் மற்றும் mAadhaar செயலியில், அவர்கள் கொடுத்த மொபைல் எண்ணின் கடைசி 3 இலக்கங்களைப் பார்க்க முடியும்.மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்கவோ, புதுப்பிக்கவோ விரும்பினால், மக்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்லலாம்.

Vignesh

Next Post

மகாத்மா காந்தியின் பேரன் காலமானார்..‌! தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...!

Wed May 3 , 2023
மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89. இவர் மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தி- சுசீலா தம்பதிக்கு 2-வது மகனாக தெற்கு ஆப்பிரிக்காவில் பிறந்தவர். 2016-ம் ஆண்டு வரை நியூயார்க்கில் வசித்து வந்த அவர், பின்னர் இந்தியாவுக்கு திரும்பினார். கோலாப்பூரில் வசித்து […]

You May Like