ரஷ்யா ஆக்ரமிப்பு பகுதியில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலால் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன .
யுத்தத்தின்போது உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் என்ற பகுதியை ரஷ்யா கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள பரபரப்பான மார்க்கெட் ஏரியாவில் உக்ரைன் படைகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும் 10 பேர் படுகாயம் அடைந்ததாகவும் டொனெட்ஸ்க் நகரின் மேயரான அலெக்ஸி குலெம்சின் தெரிவித்திருக்கிறார்.
இவை தவிர ரசியாவின் உஸ்ட்-லுகா துறைமுகத்தில் ரசாயன போக்குவரத்து டெர்மினலில் உக்ரைன் ட்ரோன்களின் மூலம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதன் காரணமாக உஸ்ட்-லுகா துறைமுகம் தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த தாக்குதல்கள் ரஷ்யாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி தொழிற்சாலைக்கு மிக அருகில் நடந்திருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் உயிர் பலி எதுவும் இல்லை என்றாலும் துறைமுகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அறிவித்துள்ளது.