fbpx

அசத்தல்…! இன்று காலை 10:30 மணிக்கு..! 51,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் மோடி…!

புதிதாக பணியில் சேர தேர்வான 51,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் புதிதாக பணியில் சேர தேர்வான 51,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்குகிறார். நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு மேளா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் சிஆர்பிஎப், எஸ்எஸ்பி, அசாம் ரைபிள்ஸ், சிஐஎஸ்எஃப், ஐடிபிபி, என்சிபி மற்றும் தில்லி காவல்துறை போன்ற பல்வேறு பணியாளர்களை உள்துறை அமைச்சகம் நியமிக்கிறது.

நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் இவர்கள், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களில் கான்ஸ்டபிள் (பொதுப்பணி), சப்-இன்ஸ்பெக்டர் (பொதுப்பணி) மற்றும் பொதுப்பணி அல்லாத கேடர் பதவிகள் போன்ற பல்வேறு பதவிகளில் சேர உள்ளனர்.

சி.ஏ.பி.எஃப் மற்றும் டெல்லி காவல்துறையை வலுப்படுத்துவது, உள்நாட்டு பாதுகாப்புக்கு உதவுவது, பயங்கரவாத எதிர்ப்பு, கிளர்ச்சியை எதிர்த்துப் போராடுவது, இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது போன்ற பல பரிமாண பங்கை மிகவும் திறம்பட செய்ய இந்த படைகளுக்கு இந்த வேலைவாய்ப்பு உதவும்.

Vignesh

Next Post

வயதானவர் என்று கூட பார்க்காமல் பெற்ற தாயை நடு ரோட்டில், தரதரவென்று இழுத்துச் சென்ற மகன்…..! பொதுமக்கள் என்ன செய்தனர் தெரியுமா.....?

Mon Aug 28 , 2023
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல், ஒரு வயதான பெண்ணை அவருடைய மகன் நடு ரோட்டில், தரதரவென்று இழுத்துச் சென்ற வீடியோ, இணையதளத்தில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலம் பாக்பத் அருகே குஹால் கிஷன்பூர் பரால் என்ற கிராமத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில், வயதான […]

You May Like