இந்தியாவில் நீருக்கு அடியிலான கேபிள், தரை இணைப்புகளுடன் இணையும் பகுதியின் உரிமக் கட்டமைப்பு முத்து பங்குதாரர்கள் இன்று மாலைக்குள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
இந்தியாவில் நீருக்கு அடியிலான கேபிள், தரை இணைப்புகளுடன் இணையும் பகுதியின் உரிமக் கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை செயல்முறை குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிசம்பர் 23, 2022 அன்று வெளியிட்டிருந்தது.
அதில் வெளியிடப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து பங்குதாரர்கள் தங்களது கருத்துக்களை ஜனவரி 20, 2023 வரையும், எதிர் கருத்துக்களை பிப்ரவரி 3, 2023 வரையும் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் கருத்துக்கள் மற்றும் எதிர் கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பங்குதாரர்களும், சங்கங்களும் கோரிக்கை வைத்திருந்ததை அடுத்து, எழுத்துப்பூர்வமான கருத்துக்களை இன்று மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.