கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலையோரம் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேவுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது சித்தேரி. இதன் கரை பகுதியில் நேற்று மாலை ஆடு மாடுகளை மேய்ப்பதற்காக சென்றவர்கள் அங்கே 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் சடலம் பாதி எரிந்தும் எரியாமலும் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்தனர் இது தொடர்பாக உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையின் விசாரணையில் அந்த பெண் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது போன்ற விபரங்கள் இன்னும் தெரியவில்லை. அந்தப் பெண் முதலில் கொலை செய்யப்பட்டு பின்னர் தான் எரிக்கப்பட்டிருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அந்தப் பெண்மணி குறித்தான விவரங்களை அறிவதற்கு காவல் துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பாக மோப்பனாய் வரவுழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது ஆனால் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தில் குற்றத்திற்கான காரணங்களையும் குற்றவாளிகளையும் கண்டறிவதற்காக மாவட்ட கண்காணிப்பாளர் மோகன் எஸ் ஐ தலைமையில் 5 படைகள் அமைக்கப்பட்டு தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.