fbpx

மத்திய அரசு அதிரடி…! BSNL-லுக்கு 4 G மற்றும் 5-G அலைக்கற்றை சேவை…! ரூ.89,047 கோடி ஒதுக்கிடு..!

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புனரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3-வது புனரமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் இதில் அடங்கும்.

இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.1,50,000 கோடியிலிருந்து ரூ.2,10,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த புதுப்பிக்கப்பட்ட நிதியுதவித் திட்டத்தின் மூலம் நாட்டின் தொலை தூரப் பகுதிகளுக்கும் தொடர்பு வசதி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நிலையான தொலைத்தகவல் சேவை நிறுவனமாக பிஎஸ்என்எல் வளர்ச்சி பெறும்.

Vignesh

Next Post

அசத்தல் அறிவிப்பு...! வேலைவாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு ரூ.15 லட்சமாக மானியத் தொகை உயர்வு...!

Thu Jun 8 , 2023
தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEG திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ ,மானியத்தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ […]

You May Like