fbpx

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்..!! – எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அரசியலமைப்பு 129-ஆவது சட்ட திருத்தம் உட்பட 2 மசோதாக்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது.

வருகிற 20-ஆம் தேதியுடன் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடையும் சூழலில், நேற்றே 2 மசோதாக்களையும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்வார் என செய்தி வெளியான நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசியலமைப்பு (129வது திருத்தம்) சட்டத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார். ஜன நாயகத்திற்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சாமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Read more ; ”இத்தனை நாள் இது தெரியாம போச்சே”..!! ஸ்மார்ட் போனில் இருக்கும் இந்த சிறிய ஓட்டையை கவனிச்சிருக்கீங்களா..? எதற்கு தெரியுமா..?

English Summary

Union Law Minister Arjun Ram Maghwal introduced the Constitution (129th Amendment) Bill to implement the One Country One Election Act.

Next Post

உங்கள் காரில் உள்ள இந்த ஒரு பொருள் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும்.. உடனே தூக்கி போடுங்க..!

Tue Dec 17 , 2024
Is it safe to drink bottled water while sitting in a hot car? Read this post to learn more.

You May Like